கடமலைக்குண்டு, மே 23- தேனி மாவட்டம் கடமலை -மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீசி வருகிறது. விவசாயிகள் முருங்கை, பப்பாளி உள்ளிட்ட மரங்கள் விழுந்து விடாமல் இருக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கடமலைக்குண்டு கிராமத்தில் சூறாவளிக் காற்று வீசி யது. மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவ ரின் தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் நிலப் பரப்பளவில் நட்டு வைக்கப்பட்டிருந்த பப்பாளி மரங்களில் பெரும்பாலானவை சூறாவளியால் உடைந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி சுதாகர் கூறுகையில் மொத்த மிருந்த 1200 மரங்களில் 800-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றினால் உடைந்து விழுந்துள்ளது. பறிப்பதற்கு தயாராக இருந்த பப்பாளி பழங்கள் கீழே விழுந்து வீணானதால் மூன்று லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரி கள் யாரும் தற்போது வரை பார்வையிடவில்லை. அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டு மென்றார்.