tamilnadu

தூத்துக்குடி முக்கிய செய்திகள்

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

தூத்துக்குடி, ஏப்.25-தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பள்ளிவாசல் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜமீன் (52). எலக்ட்ரீஷியனான இவர், தனது வீட்டில், சீரியல் பல்புகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாத்திமா அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


லாரி மோதி ஒருவர் பலி

தூத்துக்குடி, ஏப்.25 - தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே கீழஈறால் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி திருமால்சாமி (58). இவர் புதனன்று இரவு எப்போதும் வென்றான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து சேலத்திற்கு லோடு ஏற்றிச் சென்ற லாரி திருமால்சாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.