தூத்துக்குடி, அக்.12- தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீடு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் விதவை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சிபிஎம் கயத்தாறு ஒன்றியச் செயலாளர் சாலமன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் லாசர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், சீனி.பாண்டி, சுந்தரி, மாரியப்பன், ஜெயக்குமார், தவமணி, ராசையா, ராமலட்சுமி, அக்கம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கயத்தாறு துணை வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
எட்டையபுரம்
எட்டையபுரம் தாலுகாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வேலுச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் நடராஜன், கட்டுமானத் தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் செல்வகுமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜப்பா, வைரமாலை, ராமர், முருகேசன், முத்தழகு, விவசாய தொழிலாளர் சங்க கிளைச் செயலாளர் பொன்ராஜ், கிளைத் தலைவர் மாரிமுத்து உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தாலுகாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் வள்ளியம்மாள், சாமிநாதன், நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் தேவாரம், மாவட்ட துணைச் செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் முத்துகுமார், உடன்குடி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒட்டப்பிடாரம்
ஒட்டப்பிடாரம் தாலுகாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முகராஜ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே. பி. ஆறுமுகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராகவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மொட்டைசாமி, செல்வம், கணேசன், கே.மாரியப்பன், ஜி.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.