தூத்துக்குடி, ஜூன்1 திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச் செந்தூர், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் திருமணி (50). கூலித் தொழிலாளியான இவர் ஞாயிறன்று தனது வீட்டருகே சென்ற 17 வயது சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து திருமணியை கைது செய்தார்.