tamilnadu

மூணாறு நிலச்சரிவில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு  ஆறுதல்

தூத்துக்குடி, ஆக.11- கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் கீதாஜீவன் ஆறுதல் தெரிவித்தார். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத் தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயி ரிழந்த 49பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள் ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத் தாறு பாரதிநகரைச் சேர்ந்த 22 பேர் பலி யாகி உள்ளனர். அவர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொறுப்பாளர் கீதாஜீவன், கயத்தார் பாரதி நகருக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் படங் களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி னார். தொடர்ந்து நிலச்சரிவில் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி னார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் 75 ஆயி ரம் வழங்கினார்.
 அமைச்சர் ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் ஓட்டப்பிடா ரம் கோவிந்தபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் உயிரிழந்த னர். அவர்களின் உறவினர்களிடம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செவ்வாயன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மரணமடைந்த கண்ணன் என்பவரது சித்தப்பா மோகனிடம் ரூ.25 ஆயிரம் நிதியினை அமைச்சர் வழங்கி னார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடன் இருந்தார்.

;