மூன்று லட்சம் பேர் முடக்கம்
கிருஷ்ணகிரி, ஏப்.12- கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாள் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளதால் ஒசூர், தேன்க னிக்கோட்டை சூளகிரி வட்டங்களில் உள்ள தொழில்சாலைகள் அனைத் தும் மூடியுள்ளது. இதனால் தினமும் ரூ.1000 கோடிக்குz மேலான இரு சக்கர, கனரக வாகனங்கள், உற்பத்தி முடங்கியுள்ளதால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கி யுள்ளனர்.
கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள தொழில் நகரமான ஒசூ ரில் கனரக, இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் இந்துஜா குழு மத்தின் அசோக் லேலண்ட் 3 கிளைகள், டிவிஎஸ் குழுமங்களின் 8 க்கும் மேற்பட்ட கிளைகள், டாட்டா நிறுவ னத்தின் டைட்டான் வாட்ச், மற்றும் தனீஷ்க் தங்க நகை ஆபரண உற்பத்தி, மற்றும் விற்பனை பிரிவு கள், கார் என்ஜின் உற்பத்தி செய்து வரும் ஆவ்டெக், ராணுவ தளவாட வாகனங்களை உற்பத்தி செய்யும் டட்ரா உத்யோக், மற்றும் கேட்டர் பில்லர், தனேஜா இந்துஸ்த்தான் லீவர், இந்துஸ்த்தான் மோட்டார்ஸ், ஏரோஸ்பேஸ், பாட்டா மோட்டார்ஸ், இந்தியா நிப்பான், உட்பட பெரிய தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த பெரும் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் உற்பத்தி வேலைகள் இல்லாமல் தவிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தாங்களாகவே தொழில்சாலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழ்நி லைக்கு தள்ளப்பட்டுடுள்ளன.
500க்கும் மேற்பட்ட கிரானைட் சிறு தொழிற்சாலைகள் உட்பட மூடப் பட்டுள்ளது. பெரிய தொழில்சாலை கள் மூடியுள்ளதால் அந்த நிறுவ னங்களின் உதிரி பாகங்களை அவர்க ளிடம் கொடுக்கவும் முடியாமல் அதற்கான பண முடக்கத்துடன் உதிரி பாகங்களை தங்களது தொழில்சாலை களில் வைத்துள்ளனர். இதனால் கட னில் கச்சா பொருள்களை வாங்கிய வர்கள் கடனை திருப்பி செலுத்தவும் முடியாமல், உதிரி பாகங்களை நிறுவ னங்களுக்கு கொடுக்கவும் முடியா மல், ஏற்கனவே வரவேண்டிய உதிரி பாகங்களுக்கும், செய்து கொடுத்த வேலைக்கும் உள்ள பாக்கி தொகை யும் பல மாதங்களாக கிடைக்காமல் சிறு தொழில் நிறுவனங்களின் உரிமை யாளர்கள், தொழில் முனைவோர்கள் கடும் நெருக்கடியில் அவதியுற்று வரு கின்றனர்.
குறிப்பாக, சிறு தொழில் நிறுவனங் கள் வாடகையில் இயங்கி வருகின்றன. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பின்னும் தொழிற்கூடத்தின் கட்டி டத்திற்கு வாடகை கேட்டு வற்புறுத்து வதால் சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் சொல்ல முடியாத மன உளைச்சலா லும் துயரத்தில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, 18 சதவிகிதமாக இருந்த வரியை, ஜி.எஸ்.டி மாற்றம் செய்தபோது 28 சதவிகிதமாக உயர்த்தியதால் சிறு மற்றும் குறு நிறுவ னங்கள் கடந்த 6 மாதங்களாக ஜி.எஸ்.டி வரி செலுத்தமுடியவில்லை என அறிவித்து மூடியுள்ளதாக ஹோஸ்டியா செயலாளர் வடிவேல், தலைவர் வேல்முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
ஓசூர், மற்றும் மாவட்டம் முழுவதும் நன்றாக இயங்கி வந்த மொத்த தொழிற்சாலைகளும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு தவறு செய்துள்ளதை அரசுகளின் கவனத் திற்கு கொண்டு சென்றும், ஜிஎஸ்டி ஐ பல இனங்களுக்கு நீக்கவும், சூழலுக் கேற்ப குறைக்கவும், பழைய வரிக்கு குறைக்கவும் நடவடிக்கை எடுக்காத தால் ஏற்கனவே சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு 144 தடை நடவடிக்கை யால் பெரிய மற்றும் சிறு தொழில் நிறு வனங்கள் முடங்கியுள்ளதால் தினமும் ரூ.1000 கோடிக்கு உற்பத்தி முடங்கி யுள்ளது. இந்த ஊரடங்கு தொடருமா னால் மிச்சம் மீதியுள்ள சிறு தொழில் நிறுவனங்களும் இனி நிரந்தரமாக நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் படும் என்று தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்சாலைகள் சங்கத்தின் தலைவர் வெற்றி.ஞானசேகரன் கூறி னார்.
ஓசூர் மற்றும் மாவட்டம் முழுவ தும் 3600 க்கும் மேற்பட்ட தொழிற் சாலை கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் தினமும் ரூ. 1000 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்புடன் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை, மற்றும் ஊதியம் இன்றி முடங்கியுள்ள னர் நீட்டிக்கப்பட்டுள்ள 144 தடை காலத்தில் சாப்பாட்டு, செலவுகள், மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணமாக முழு சம்பளம் முன் பணமாக வழங்க வேண்டும் என சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் நஞ்சுண் டன், பொருளாளர் பீட்டர் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அர சுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஒய்.சந்திரன்