tamilnadu

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை நீர் திறந்து விடுக! சிபிஎம் போராட்டம் அறிவிப்பு

திருவாரூர், மே 16- கடந்த 125 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிக்காக ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி யன்று திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் இடைவெளியுடன் வட்டாட்சியர் அலுவல கங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் கோரிக்கை மனுவை அளிப்பது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. சனிக்கிழமையன்று கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஒருங்கிணைப்பில் காணொளி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து தற்போதைய நிலவரங்கள் குறித்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மையக்குழு உறுப்பினர்கள் ஜி.பழனி வேல், எம்.சேகர், எம்.கலைமணி மற்றும் வி.எஸ். கலியபெருமாள், ஆர்.குமாரராஜா, நா.பாலசுப்ர மணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு அரசு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கிராமப்புற ஏழ்மையை தற்போதைய வறுமை நிலையை போக்குவதற்கு சாகுபடி பணிகளை உடனே துவங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவை யான விதை, இடுபொருட்கள், எளிமையான கடன் வசதி போன்றவை கிடைப்பதற்கு மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  100 நாள் வேலைத் திட்டத்தை பெயருக்கு ஏற்றாற் போல் 100 நாட்களும் வழங்க வேண்டும். சட்டக்கூலியை வாரம் ஒருமுறை முழுமையாக வழங்க வேண்டும். காவிரி ஆணையத்தின் தன்னாட்சியை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி துறையோடு இணைத்ததை திரும்பப் பெற வேண்டும்.  ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் அளவு மக்களுக்கு பரவலாக கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று மாத இலவச அரிசி, கோதுமை, தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி போன்றவற்றை உரிய அளவில் விடுபடாமல் வழங்க வேண்டும்.  கடந்த மார்ச் மாதம் முதலே ரேஷன் பொருட்கள் முழுமையாக குடும்பங்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இந்த குளறு படிகளை அரசு களைந்து மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்ட தலைநகர்களிலும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தனிநபர் இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

;