tamilnadu

img

சிறுபான்மை மக்களுக்கு கடனுதவி வழங்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஆக.22- திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 150 சிறுபான்மை மக்கள், சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் சா.ராமசாமி முன்னிலையில் மாவட்ட சிறுபான்மை மக்கள் நல துணை ஆட்சியர் ஜெய ராஜிடம் கோரிக்கை விண்ணப்பத் தினை அளித்தனர். திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கோரிக்கை விண்ணப் பங்களை பெற்றுக் கொண்ட துணை ஆட்சியர் ஜெயராஜ் நடவ டிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித் தார்.  இதுபற்றி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செய லாளர் சா.ராமசாமி செய்தியாளர்களி டம் தெரிவித்ததாவது: சிறுபான்மை மக்களின் குழந்தை களுக்கான கல்வி உதவித்தொகை, கறவை மாடு, சிறு அங்காடிகளுக் கான கடனுதவி உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான நேரடி கடன்கள் மானியத்துடன் கூடிய கடன்கள் மற்ற தொழிலுதவிகள் பெறுவதிலும் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய சிறுபான்மை நலக்குழு பொரு ளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள முத்துப்பேட்டை சிறுபான்மை மக்களை திரட்டி அக்கடனுதவிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வரு கிறது. திருத்துறைபூண்டி வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு வரவிருந்த சிறுபான்மை மக்கள் நலத்துறை மாவட்ட துணை ஆட்சியர் ஜெய ராசை சந்தித்து கோரிக்கை விண்ணப் பங்களை நேரில் அளிப்பதற்கும் ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடனுதவிகள் பெறுவதற்கும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் மாவட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக 22-ம் தேதி திருத்துறைபூண்டி வருவாய் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு வந்திருந்த சிறு பான்மை மக்கள் நல மாவட்ட அதி காரி ஜெயராஜை நலக்குழுவின் மாவட்ட செயலாளர் சா.ராமசாமி மாவட்டக்குழு உறுப்பினர் இப்ராகீம் சேட் முத்துப்பேட்டை ஒன்றிய நலக் குழுவின் செயலாளர் கே.அஜ்மீர்கான், பொருளாளர் சூசை மாணிக்கம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் ஒன்றியக்குழு உறுப்பினர் சி.செல்லதுரை உள் ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் 150 முஸ்லீம் பெண்களுக் கான நிதியுதவி கோரும் விண் ணப்பங்கள் மாவட்ட அதிகாரியிடம் நேரில் அளிக்கப்பட்டன. விண்ணப் பங்களை பெற்றுக் கொண்ட மாவட்ட சிறுபான்மை நல துணை ஆட்சியர் ஜெயராஜ் விண்ணப்பங்கள் மீது நட வடிக்கை எடுப்பதாக உறுதி கூறி னார். இவ்வாறு சா.ராமசாமி கூறினார்.