திருவண்ணாமலை, ஜூன் 9- திருவண்ணாமலை மாவட்டம் வாணா புரம் அருகே உள்ள தொண்டமானூர் கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (40). இவரது 2 வயது மகன் பிரடினான்ட், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டி ருந்தான். அப்பொழுது திடீரென, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், படுகாயமடைந் தான். உடனடியாக மீட்டு, இளையாங் கண்ணியிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாணாபுரம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் ஆகி யோர் விசாரணை நடத்தினர்.