tamilnadu

img

திருவண்ணாமலை நகராட்சி பூங்காவில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

திருவண்ணாமலை, ஜூன் 29- திருவண்ணாமலை  நகராட்சியில் துப்பு ரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப் படாததால், பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா  குப்பை குவிய லாகக் காட்சியளிக்கிறது. நகரின் முக்கிய  பகுதி என்பதால்,  இங்கு  ஏராளமான வணிக  நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவ னங்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு முறையாகக் குப்பைகளை அகற்றாததால், கடும் துர்நாற்றம் வீசுவ துடன் கொசு உற்பத்தி அதிகரித்து பொது மக்கள் மர்மக் காய்ச்சல் பீதியில் உள்ள னர். இதுபற்றி பலமுறை நகராட்சி அதிகாரி களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி கள் வார்டுகளில் ஆய்வுக்கு வருவதே இல்லை. இதனால் குப்பைகள் அகற்றப்  பட்டதா இல்லையா என்பதைக் கூட கண்காணிக்காமல் அலட்சியமாக உள்ள னர். எனவே சம்பந்தப் பட்ட உயர் அதிகாரி கள் உடனடியாக நகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளைத் தினசரி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

;