tamilnadu

img

குடியிருப்புகள் நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி, ஜூன் 22- அவிநாசி அருகேயுள்ள நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியின் நடுவே உள்ள மின்கம்பத்தையும், தாழ்வாக செல்லும் மின் இணைப்பையும் மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் சனியன்று திடீ ரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட நரிக்குறவர் காலனிப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப் பகுதியின் நடுவே மின்கம்பங்களும், வீடு களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு தாழ் வாக உள்ளது. இதனால் மழைக்காலங் களில் மின் விபத்துகள் ஏற்படும் வாய்ப் புள்ளது. மேலும் தெருவிளக்குகள் எரி யாமல் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வா கத்திடமும், மின்சார வாரியத்திடமும் பல  முறை மனு அளித்தனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.   இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சனியன்று மாலை  அவிநாசி -பெருமாநல்லூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த  காவல்துறையினர் மற்றும்  ஊராட்சி  ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த் தையில் மின்வாரியத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.  இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர். இதனால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

;