tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரிக்க இலவச பயிற்சி

திருப்பூர், மே 11- திருப்பூரில் குழந்தைகளுக்கு பனை ஓலையில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான இலவச பயிற்சி முகாம்இன்று (மே12) நடைபெறுகிறது. திருப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் மற்றும் சுப்ரீம் பேரடைஸ் ஆகியவை சார்பில்திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அரிமா அரங்கில் ஞாயிறன்று (மே 12) காலை 9.50 மணி முதல் 12.30 மணி வரை பனை ஓலைகளில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான செய்முறை பயிற்சியும், இசை, பாடல்கள் வாயிலாக குழந்தைகளுக்கு கதைச்சொல்லி தனித்திறன் அறிதல் மற்றும் ஊக்குவித்தல் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு 

திருப்பூர், மே 11 -திருப்பூர் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிராஜ்தீன் மற்றும் ஹரீஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்ஓராண்டு காலம் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டிருப்பதாக சனியன்று மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.