tamilnadu

img

நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமிக்கும் கோயில் நிர்வாகம் பெருமாநல்லூரில் அரசியல் கட்சிகள் போராட்ட அறிவிப்பு

திருப்பூர், ஜூன் 3 – திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி அங்குள்ள கொண்டத்துக் காளியம்மன் கோயில் நிர்வாகத்தினர் ஆக்கி ரமிப்பு செய்ய முயல்வதுடன், பொதுப் போக் குவரத்தையும் தடுத்து வருகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைக் கண்டித்தும், மக்களுக்கான பொதுப் பாதையை ஜூன் 8ஆம் தேதிக்குள் மீட்கா விட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவதென்று அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளது. பெருமாநல்லூர் கொண்டத்துக் காளி யம்மன் கோவில் நிர்வாகம் கோவில் அருகே செல்லும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான நம்பியூர் மற்றும் வடக்கே கிராமங் கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலையை  இருபுறம் வழிமறித்து அடைத் துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கார ணமாக ஊரடங்கு உத்தரவால் பொது மக்க ளும் அமைதி காத்தனர். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் அத்தடையை அகற்ற கோவில் நிர்வாகத்திடம் பொதுமக்கள் கூறி னர்.

அவர்களும் ஜூன்1-ஆம் தேதிக்குள் எடுத்து விடுகிறோம் என்று கூறினர்.  ஆனால் குறிப்பிட்ட கெடுவுக்குள் அதை அகற்றாததால் பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிக வும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் அத்தடையை இருசக்கர வாக னம் செல்லும் அளவிற்கு ஜூன் 1ஆம் தேதி யன்று அகற்றினர். ஆனால் கோவில் நிர் வாகம் காவல்துறைக்குத் தகவல் கூறி, அதை மீண்டும் அடைக்கச் செய்தனர். பொதுமக்கள் கோவில் நிர்வாகத்தின் மீது காவல்துறையிடம் இது சம்பந்தமாக புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெருமாநல்லூர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வா யன்று மாலை 6 மணி அளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

பெருமாநல் லூர் திமுக ஊராட்சி செயலாளர் வேலுச் சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் திமுக ஒன்றிய செயலாளர் விஸ்வநா தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனி சாமி, கிளைச் செயலாளர் பி.கே.கருப்பு சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மதிமுக திருப்பூர் ஒன்றிய செயலாளர் வி.கே.சந்திரமூர்தி, எம்எல்எப் விசைத்தறி மற்றும் பொது சங்க செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு சட்டமன்ற செய லாளர் மூர்த்தி, காங்கிரஸ் கருப்புச்சாமி, தென்னக மக்கள் கட்சி ராஜேந்திரன் உள்பட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், கோவில் நிர்வாகம் நெடுஞ்சா லைத் துறை பாதையை தொடர்ந்து ஆக்கி ரமிப்பு செய்வதை கண்டித்தும், இதனை நெடுஞ்சாலைத்துறை கண்டும், காணாம லும் இருப்பதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் ஜூன் 8ஆம் தேதிக்குள் கோவில் நிர்வாகம் அத்த டையை அகற்றாவிட்டால் அடுத்தகட் டமாக அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத் துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

;