tamilnadu

img

முருங்கப்பாளையம்: இடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்

திருப்பூர், டிச. 3 - திருப்பூர் முருங்கப்பாளையத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப் பில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. முருங்கப்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வரு வாய் பிரிவினருக்கான ஈ பிரிவு வீடுகள் உள்ளன. இங்கு மொத்தமுள்ள 42 வீடுகளில் 11 வீடுகளில் மட்டும் வாடகை அடிப்படையில் குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்த குடியி ருப்பு கட்டிடங்கள் மிகவும் சிதிலம டைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழக் கூடும் என்ற நிலையில் உள்ளன. எனவே பெரும்பாலான வீடுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையில் கடந்த சனியன்று இங்கிருந்த ஒரு வீட்டின் மேற்பகுதி சிலாப் இடிந்து கீழே விழுந்தது. இதைய டுத்து வீட்டு வசதி வாரிய உதவி செயற் பொறியாளர் ஞாயிறன்று நேரில் வந்து பார்வையிட்டார். அங்கு குடியிருக்கக் கூடியவர்களிடம் உடனடியாக வீடுக ளைக் காலி செய்து செல்லும்படி அறி வுறுத்தினார். எனினும் குறைந்த வரு வாய் பிரிவினர் என்ற அடிப்படையில் மாற்று வீடுகளை ஒதுக்கித் தருவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் இங்கு குடியிருப்போர் திகைத்து நிற் கின்றனர். உடனடியாக வேறு வீடுகளை வாடகைக்கு பிடித்துச் செல்ல வேண் டிய நிர்பந்தமான நிலையில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர். அதேசமயம் இந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற நிலை இருப்பதால் உடனடியாக வெளியேறு வது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதையும் குடியிருப்புவாசிகள் ஒப் புக் கொள்கின்றனர். இதற்கிடையில், சிதிலமடைந்த குடியிருப்பை இடிப்பதற்கு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்திருப்பதாக வும் கூறப்படுகிறது. அது சரியான முடி வாக இருந்தாலும் இங்கிருக்கும் மக்க ளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்போர் எதிர்பார்க்கின்றனர்.

;