tamilnadu

img

திருப்பூரில் ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருப்பூர், ஜன. 21- திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்  கூட்டரங்கில் செவ் வாயன்று அலகுமலை கிராமத் தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழா தொடர்பான ஒருங்கிணைப் புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் க.விஜ யகார்த்திகேயன் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் வரும் பிப். 2ஆம் தேதி அலகுமலை கிராமத் தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற வுள்ளது. ஜல்லிக்கட்டு விழா வில் பங்கேற்க உள்ள காளை கள் மற்றும் வீரர்கள் குறித்த விவ ரங்களை அமைப்பாளர்கள், முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். பங்கேற் பாளர்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள் ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.  ஜல்லிக்கட்டு விழாக் குழுவி னர் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பூர்த்தி செய் யும் பட்சத்திலேயே மாவட்ட நிர் வாகத்தால் அனுமதி வழங்கப்ப டும். விழா அமைப்பாளர்கள், விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை பராம ரிப்புத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட் டுள்ளனவா என்பதை உறுதிப் படுத்த வேண்டும். மேலும், காளை களுக்கு எவ்விதமான ஊக்க மருந் துகளோ மற்றும் எரிச்சல் அளிக்கக் கூடிய பொருட்களையோ செலுத் தக்கூடாது. ஜல்லிக்கட்டினை திறந்த வெளியில் நடத்திட வேண் டும். காளைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இடம், மருத்துவ பரி சோதனை செய்யும் இடம் மற்றும் காளை சேகரிப்பு மையம் ஆகிய இடங்களில் சாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளை களை வெயிலிலிருந்தும், மழை யிலிருந்தும் காக்க வேண்டும். காளைகளை நுழைவுப் பகுதிக்கு அழைத்து வந்த பின்புதான் அதன் உரிமையாளர் மூக்கணாங்கயிற்றை அவிழ்த்து காளையினை திடலில் அனுமதிக்க வேண்டும்.  விழா திடல் அமைக்கப்படும் பகுதி குறைந்தபட்சம் 50 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருத்தல் வேண்டும். இப்பகுதி யில் மட்டுமே காளைகளை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற் கும் வீரர்கள் தழுவ முற்பட வேண் டும்.  ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் வீரர்களை வாடிவா சல் முகப்பில் நிற்கவோ, காளை கள் திடலிலிருந்து வெளியேறும் பகுதியில் இடைமறித்து நிற்கவோ அனுமதிக்கக்கூடாது. ஜல்லிக் கட்டு விழாவில் பங்கேற்கும் வீரர் கள் காளைகளின் திமிலை தழுவி யபடி 15 மீட்டர் தூரத்திற்கு செல் லவோ அல்லது 30 விநாடிகள் தழு வியபடி செல்லவோ அல்லது காளை களின் மூன்று துள்ளல்களை கட்டுப்படுத்தி தழுவியபடி செல்ல மட்டுமே அனுமதிக்க வேண் டும். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் கைகளை கொண்டு காளைகளின் வால் மற்றும் கொம்புகளை பிடிக் கவோ அல்லது காளைகளின் கால்களை பிடித்துக் கொண்டு காளைகள் முன்செல்வதை தடுக் கவோ கூடாது.  இவ்வாறு விதிமீறி செயல்ப டும் வீரர்களை தொடர்ந்து பங் கேற்க அனுமதிக்கக் கூடாது. 15 மீட்டர் பரப்பளவு தளம் முழுவ தும் வீரர்களுக்கும், காளைகளுக் கும் காயங்கள் ஏற்படாதவாறு தேங்காய் நார் பரப்புதல் வேண் டும். காளைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இடம், காளை சேக ரிப்பு மையம் மற்றும் தேவைப் படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நிகழ்வு களை பதிவு செய்தல் வேண்டும். மேலும், இவ்விழாவில் வருவாய்த் துறை, காவல் துறை , ஊரக வளர்ச் சித்துறை, தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பொதுப் பணித்துறை, மருத்துவத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகிய துறைகள் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டு மென தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாவட்ட வருவாய் அலுவ லர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், கூடுதல் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் (பல்ல டம்) முருகவேல், உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) பாலசுப்பிர மணியன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, கால் நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரகுநா தன், ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க தலைவர் பழனிசாமி, அலகுமலை ஜல்லிக்கட்டு காளை கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

;