tamilnadu

திருப்பூரில் ரூ.2.33 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் பெருமாநல்லூரில் நடத்திய சோதனையில் ரூ.2.33 லட்சம் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  அதன்படி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் 4 வழிச் சாலை பகுதியில், திருப்பூர் வடக்கு தேர்தல்பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாயன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே ஈரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த டி.வினோத்குமார் (30) என்பவரது வேனை நிறுத்தி சோதனைசெய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 33ஆயிரத்து 850 கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து அதிகாரிகள் கேட்டபோது,ஈரோட்டில் பின்னலாடை துணிகள்விற்பனை செய்த பணத்தை வீட்டுக்குஎடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

;