tamilnadu

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்க தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை

திருப்பூர்,மே 26:  வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர் மீது எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திடக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலித் விடுதலை இயக் கத்தின் மாநில பொதுச் செயலா ளர் ச.கருப்பையா, காங்கயம் வட்டாட் சியருக்கு செவ்வாயன்று அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:    திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் நகராட் சிக்கு உள்பட்ட சொரியங்கிணத்துப் பாளையத்தில் விவசாயத் தொழிலா ளர்கள், உழைக்கும்  உதிரித் தொழிலா ளர்கள் மற்றும் வெள்ளக்கோவில் நகராட்சியில் தூய்மை பணியாளர்க ளாக பணியாற்றும் அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல்  11 ஆம் தேதி இரவு 11 மணியளவில்  வெள்ளக்கோவில் நகராட்சி ஆணை யர் சசிகலா, சொரியங்கிணத்துப்பா ளையம் அருந்ததியர் குடியிருப்பு பகு திக்குச் சென்று, அருந்ததிய மக்கள் மாடு அடித்து மாட்டுக்கறி குழம்பு வைத் திருப்பதாக வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை என்கிற பெயரில் சாதம் மற்றும் குழம்புகளை வீட்டிலிருந்து தூக்கி வந்து வெளியில் கொட்டியுள்ளார். இதனை எதிர்த்து கேட்ட பெரியவர்க ளையும், பெண்களையும் சாதியை சொல்லி திட்டியுள்ளார். மீண்டும், 14 ஆம் தேதி வெள்ளக் கோவில் நகராட்சி ஆணையாளர் சசிகலா, நான் நினைத்தால் தண்ணி,  மின்சாரம் எதையும் வரவிடாமல்  நிறுத்திவிடுவேன், சொரியங்கிணத் துப்பாளையத்தை கொரோனோ பாதித்த பகுதியாக முடக்கி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோ வில் நகராட்சி ஆணையர் சசிகலா மீது 1989 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகள் (ம) பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2018-ம் ஆண்டின் புதிய திருத்தங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து  கைது செய்திடுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று மின்னஞ்சல் மூலமாக புகார் மனு அனுப்பப்பட்டது. இதன் பின்னர், ஏப்ரல் 16 ஆம்  தேதி மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் அடிப்படையில், காங்கயம் வரு வாய் வட்டாட்சியர் சொரியங்கிணத் துப்பாளையம் சென்று பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களிடம் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வமான அறிக்கை பெற்று, அது மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டும் ஏறக்குறைய 40 நாட்களை கடந்தும் கூட, இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தாங்கள் இப்பிரச்சனை யில் நேரடியாக தலையிட்டு சாதி வெறியோடு நடந்துகொண்ட வெள் ளக்கோவில் நகராட்சி ஆணையர் சசிகலா மீது 1989-ஆம் ஆண்டு பட்டி யல் சாதிகள் (ம) பழங்குடியினர் மீதான  வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2018-ம் ஆண்டின் புதிய திருத்தங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;