அவிநாசி, அக். 8- அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை புத னன்று தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவு றுத்தலின்படி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் துறையி னர், புகார் அளிக்க வருபவர் களின் குழந்தைகளின் பாது காப்பு மற்றும் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக விளை யாட்டு அறை தொடங்கப்பட்டது. இதில், விளையாட்டு உபகரணங்கள், அறிவு சார்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம் பெற் றுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.