tamilnadu

img

இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயம் அழிந்துவிடும்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், எரிவாயு குழாய் பதிப்பு,  எட்டு வழிச் சாலை, உயர் மின்  கோபுரம் போன்ற விவசாயி களுக்கு எதிரான பல்வேறு திட் டங்களை மத்திய, மாநில அரசு கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் புதிய மின்சார சட்டத்தை நிறைவேற்ற  முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை யான விவசாயிகள் விவசா யத்தைக் கைவிட வேண்டிய  அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ள னர். இதுகுறித்து அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டா ரத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் கூறுகையில்,  

வேலுச்சாமி

அவிநாசி சுற்றுவட்டாரப் பகு தியில் விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததன் காரணமாக பெரும் பகுதியினர் பாரம்பரிய தொழிலான விவ சாயத்  விட்டுவிட்டு தறி, பனியன் கம்பெனி, கோழிப்பண்ணை,  முயல் வளர்ப்பு போன்ற வெவ் வேறு தொழில்களுக்கு மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கு  காரணம் கிணற்றில் தண்ணீர் இல்லை, ஆழ்துளை கிணறு களை நம்பியே விவசாயம் செய்கின்றோம். உதாரணமாக ஆழ்துளை கிணற்றில் இருந்து 7 எச்பி மோட்டார் மூலம் கால் ஏக்கருக்கு தண்ணீர் வினியோ கம் செய்வதற்கு 20 மணி நேரம் ஆகிறது,

இதற்கு மின்சாரம் கட் டணம் விதித்தால் நிச்சயம் விவ சாயம் செய்ய முடியாது.  அன்றைக்கு என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்,ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் என்று சினிமா  படத்தின் மூலமாக எம்ஜிஆர் அன்றைக்கு சுட்டிக் காண்பித் தார். ஆனால், தற்போது  எம்ஜி ஆர், அம்மா வழியில் ஆட்சி செய்கிறோம் என்று கூறும் அதிமுக அரசு, விவசாயிகளுக்கு எதிராக இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு துணை நிற் கிறது. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி இலவச மின்சார திட் டத்தை ரத்து செய்யும் நடவ டிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பழனிச்சாமி

அவிநாசி முழுவதும் 60  ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செழிப்பாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நகரமயமாக்கம் சூழ்நிலையில் பல பகுதியில் விவ சாயம் அழிந்து ரியல் எஸ்டேட்  நிலங்களாகவும், வீட்டுமனை களாக மாறி விட்டது. இந்தச் சூழல் உருவாகும் போதே விவ சாயத்தைக் கைவிட கூடாது என்று மனதில் வைத்து, விவசா யத்துடன் துணைத் தொழிலான விசைத்தறி போன்ற பல்வேறு தொழில்கள் வைத்துக் கொண்டு விவசாயம் செய்தனர். முன்பு ஒரு காலகட்டத்தில், விவசாய நிலத் தில் உற்பத்தி செய்கின்ற கத் தரிக்காய், அவரைக்காய்,  பீர்க்கங்காய்  உள்ளிட்டவை  விற்பனை செய்வதற்கு முன்பு  அதனுடைய விதைகளை எடுத்து பக்குவப்படுத்தி வைப்போம்.

ஆனால், தற்போது ரசாயன விதை வந்து நிலத்தையும் வீண டிக்கின்றது.  இது மட்டுமின்றி அவிநாசி சுற்று வட்டாரப் பகுதி களில் எருமை மாடுகளை காண் பது அரிதான ஒன்றாக இருக் கிறது.  இதையெல்லாம் சகித்துக் கொண்டு பாரம்பரிய விவசா யத்தை விடக்கூடாது என்று ஆழ் துளைக் கிணறுகளில் ஆயிரம் அடியிலுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து விவ சாயம் செய்து வருகிறோம்.  இந்த  நிலையில் மின்சாரத்தை ரத்து செய்தால் பல விவசாயிகள் நஷ் டம் அடைந்து உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு. ஆகவே, விவசாய பாதுகாப்பை கருத் தில் கொண்டு அரசாங்கம் இல வச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என்று கூறினார்.

குமாரசாமி

 விவசாய உற்பத்திப் பொரு ளுக்கு நியாயமான விலை  கிடைப்பதில்லை. முன்பு ஒரு காலகட்டத்தில் தங்கம் என்ன விலைக்கு விற்றது, அதே விலைக்கு மஞ்சள் விற்றது. தற் போது தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் வரை எட்டியுள்ளது. ஆனால், மஞ்சளின் விலை ரூ.6 ஆயிரம் மட்டுமே இருக்கிறது. ஏரி, குளம், குட்டை போன்ற இடங்களில் எல்லாம் அதிக அளவு தண்ணீர் இருந்தது. நிலத் தடி நீர்மட்டம் பெருகியது, விவ சாயம் செழிப்பாக இருந்தது.

பருவநிலை மாறியதன் காரண மாக மழை பொய்த்துப் போய் விட்டது. கிணற்றில் நீர் வற்றி யது, ஆழ்துளைக் கிணறுகளில் ஆயிரம் அடிக்கும் மேல்தான் தண்ணீர் கிடைக்கிறது. இதை மேலே எடுப்பதற்கு இரண்டு மோட்டார்கள் பொருத்தி அதன் பின்பு விவசாயம் செய்து வரு கிறோம். தற்போது, இந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்கும் அவலத்திற்கு  தள்ளப்படுவோம். இதை யெல்லாம் கருத்தில் கொண்டு அரசாங்கம் இலவச  மின்சா ரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித் தார்.

உயிர் தியாகத்தால் கிடைத்தது...

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வெங்கடாசலம் கூறுகை யில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில்  நிலக் கடலை, ராகி, சோளம்,கம்பு, தட்டப்பயிறு, பாசிப்பயிறு, உளுந்து, நரிப்பயிறு போன்ற தானிய உற்பத்தி சிறப்பாக இருந்தது. உழைப்புக்கும் பெயர் போன இடமாக விளங்கியது. மழையின் அளவு குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தண்ணீர் கானல் நீராக மாறியுள்ளது. தற்போது ஆழ்துளை கிணறு களில் ஆயிரத்து 300 அடியில் தான் தண்ணீர் கிடைக்கும் சூழல்  உருவாகியுள்ளது. இருப்பினும், மின்மோட்டார் மூலமாக விவ சாயம் செய்யலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.  

இதைத்தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டி தமி ழகம் முழுவதும் விவசாயக் குடும் பங்கள் போராடத் தொடங்கினர். உதாரணமாக திருப்பூர் மாவட் டத்தில், பெருமாநல்லூர், பல்ல டம் போன்ற இடங்களில் போராட்டத்தின்போது துப் பாக்கிச் சூட்டில் விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக  அன்றைய காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழு தலைவர் என்.ரமணி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஸ்தாபகரான வீரய்யன் போன்ற வர்கள் சட்டமன்றத்தில் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என வலுவாக குரல் எழுப்பினர். இதனை அன்றைய முதல்வரான கலைஞர் கருணாநிதி ஏற்றுக்  கொண்டு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித் தார். அவை இன்று வரை நடை முறையில் உள்ளது. இந்த இல வச மின்சாரம் என்பது விவசாயி களுக்கு ஒரு நிவாரணமாக உள் ளது. இத்தகைய சூழலில்ஆ ளும் அரசுகள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதை ஏற்க முடி யாது. இதனை உடனடியாக கை விட வேண்டும் என தெரிவித் தார்.

-அருண், அவிநாசி

;