tamilnadu

img

அழிக்கப்பட்ட ஒரு வரலாறு!


அரை நூற்றாண்டுக்கு மேலாக திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் சாமானிய, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல தலைமுறை மாணவர்களுக்கு கல்வி அளித்து வந்த திருப்பூர் முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பசுமையான வரலாற்று நினைவுகளைக் கொண்டது. நடப்பு கல்வி ஆண்டில் இங்கு படித்து வந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகளின் குறுகிய வணிக நோக்கிலான பார்வை காரணமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளி கட்டிடம் சமீபத்தில் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டு வெறும் கற்குவியலாக காட்சி அளிக்கிறது. வழிபாட்டு தலங்களை விட புனிதமான கல்விக்கூடம் அழிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக கல்வி ஆர்வலர்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

;