tamilnadu

img

பொங்கல் திருநாள் களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருநெல்வேலி, ஜன.16- பொங்கல் திருநாளை முன் னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, தலையணை, திருக் குறுங்குடி, திருமலை நம்பி கோயில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்க ணக்கானோர் வியாழக்கிழமை குவிந்தனர். பொங்கல் திருநாளைக் கொண் டாடும் விதமாக களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாறு, தேங்காய்உருளி சிற்றருவி, சிவபுரம் கால்வாய், வடக்குப் பச்சையாறு அணை, திருக்குறுங்குடி மலைப் பகுதி யில் உள்ள திருமலை நம்பி கோயில், நம்பியாறு, கொடுமுடி யாறு நீர்த்தேக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பய ணிகள் ஆயிரக்கணக்கானோர் காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். நேரம் செல்லச் செல்ல வாகன நெரிசல் காரணமாக வனத்துறை சோதனைச் சாவடி அருகே அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன. ஏற்க னவே தலையணை சென்ற வாக னங்கள் திரும்பிச் செல்ல, மறு புறம் ஒன்றன் பின் ஒன்றாக வாக னங்களை தலையணைக்குள் அனுமதித்தனர். இதனால் தலை யணை ஆறு, பூங்கா உள்ள பகுதி யில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. தலையணை யில் தடுப்பணையைத் தாண்டி ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமியர் அங்குள்ள பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர்.  தேங்காய்உருளி சிற்றருவி, சிவபுரம் கால்வாய், வடக்குப் பச்சையாறு நீர்த்தேக்கம், திருக் குறுங்குடி மலைநம்பிகோயில், நம்பியாறு, கொடுமுடியாறு நீர்த்தேக்கம் உள்ளிட்ட இடங்க ளிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்த தாக வனத்துறையினர் தெரிவித்த னர். காணும் பொங்கலைக் கொண் டாட வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களிலும் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். 

;