tamilnadu

img

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

மன்னார்குடி, ஏப்.1-

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர்.எம்.ராஜா முத்தையா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவுக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.ராஜா, 141 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களைவழங்கி பேசினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம், கல்லூரி துணை முதல்வர் மொகன்திஉள்ளிட்டோர் கலந்து கொண்டர்.தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தமாணவி மிமி ஜானட், இரண்டாமிடம் பிடித்த வி.அருணா, ஆர்.காவிய குமாரி, மூன்றாமிடம் பிடித்த ஆர்.வாசுகி. எஸ்.நேத்ரா, ஏ.ஸ்னோலின் ஷிரோமி ஆகியோருக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு போட்டிகளில் 3 பரிசுகளும், 5 பணமுடிப்புகளும் பெற்ற ஆர்.யுவ விஷாலினிக்கும் பரிசு வழங்கப்பட்டது.

;