tamilnadu

திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

திருச்சி மாவட்ட வாக்குச்சாவடிகளில் 12,314 அலுவலர்களுக்கு தேர்தல் பணி


திருச்சிராப்பள்ளி, ஏப்.17- திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, முசிறி,மண்ணச்சநல்லூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் தேர்தல்பணி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர்மூலம் குலுக்கல் முறையில் நடைபெற்றது.மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 1563 அலுவலர் களும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 1646 அலுவலர்களும், திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் 1329 அலுவலர்களும், திருச்சி(கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் 1288 அலுவலர்களும், 142 திருவெறும்பூர் சட்டமன்றதொகுதியில் 1449 அலுவலர்களும், 143 லால்குடி சட்டமன்றதொகுதியில் 1200 அலுவலர்களும், 144 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1316 அலுவலர்களும், 145 முசிறி சட்டமன்ற தொகுதியில் 1232 அலுவலர்களும், 146 துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1291 அலுவலர்களும் எனமொத்தம் 12,314 அலுவலர்களும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்-1, வாக்குப்பதிவு அலுவலர்-2, வாக்குப்பதிவு அலுவலர்-3 மற்றும் வாக்காளர்கள் எண்ணிக்கை 1200 மற்றும்அதற்கு மேல் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்-4 என்ற நிலையில் பணிபுரிய உள்ளனர். பணி ஒதுக்கீடு தெரிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் துறைவாரியாக, வருவாய்த்துறைஅலுவலர்களும் மூலமாகவும் மற்றும் கைபேசி குறுஞ் செய்தி ஆகிய வழிகள் மூலமாகவும் விபரங்கள் அனுப்பப் பட்டுள்ளன.


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 117 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


திருச்சிராப்பள்ளி, ஏப்.17-தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியாழனன்று நடைபெறுகிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ளவாக்குச் சாவடிகளில் 117 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராவும் பொருத்தப்படுகிறது. துணை ராணுவ வீரர் ஒருவரும் பணியில் அமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதற்காக மைக்ரோஅப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மயமாக்கப் பட்ட வங்கி அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.பயிற்சி வகுப்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுதேர்தல் பார்வையாளர் அமித்குமார், மைக்ரோஅப்சர்வரின் பணிகள், அவர்கள் கண்காணிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் மைக்ரோஅப்சர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு பணிகளை துல்லியமாக கண்காணித்து வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றார். 


;