tamilnadu

திருவாரூர் ,புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு  வண்டல் மண் வழங்கல்

திருவாரூர், ஜூன் 7- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் வடுவூர் ஏரியிலிருந்து விவசாயிகளின் விளைநிலங்களை மேம்படுத்த வண்டல் மண் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.  ஆட்சியர் த.ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் (தஞ்சாவூர் கோட்டம்) அசோகன், கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோ, ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எரிசாராய விற்பனை  2 பேர் கைது  

புதுக்கோட்டை , ஜூன் 7-
கறம்பக்குடி தாலுகா பகுதிகளில் எரிசாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு காவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அழகன்விடுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(40), தஞ்சாவூர் மாவட்டம் இலுப்பைவிடுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு(37) ஆகியோர் குளத்துப்பகுதியில் தனித் தனியே எரிசாரயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து விஸ்வநாதன் மற்றும் சாமிக்கண்ணு ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 225 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
 

பைக்குகள் நேருக்கு  நேர் மோதல் : வாலிபர் பலி

தூத்துக்குடி, ஜூன் 7- தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் (29). இவர் வியாழன் மாலை 3 மணியளவில் தனது பைக்கில் செட்டிக்குறிச்சியில் இருந்து கழுகுமலை செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கோபா லபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் கனக ராஜ் என்பவரது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் படுகாயம் அடைந்த இருவரும் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மேல் சிகிச்சைக் காக இன்பராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 6 மணியளவில் இறந்தார். இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலம் வாங்கித் தருவதாக ரூ.7.5 லட்சம் மோசடி : 2 பேர் மீது வழக்குப் பதிவு 

தூத்துக்குடி, ஜூன் 7-  தூத்துக்குடியில் நிலம் வாங்கித் தருவதாக சகோத ரர்கள் இருவரிடம் ரூ.7.5  லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 2பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மில் ரோட்டைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன்கள் ஆனந்த் ஜேசுராஜ் சாலமோன் (42), பிராங்க்லின் இன்பராஜ் (39). இவர்கள் இரு வரும் முள்ளக்காடு அருகே 7.92 சென்ட் நிலத்தை ரூ.7.50 லட்சத்திற்கு, முத்தையாபுரத்தைச் சேர்ந்த நிலத்தரகர் ஐயப்பன் மனைவி பகவதி என்பவர் மூலமாக வாங்கியுள்ளனர். ஆனால் சம்பந்தபட்ட நிலம் போலிப் பட்டா மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தெரியவரவே சாலமோன், இன்பராஜ் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.  இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்பி பரிந்துரை செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நில மோசடி தொடர் பாக நிலத் தரகர் பகவதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கந்தன் மகன் சின்னதுரை ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

;