tamilnadu

img

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து போராட்டம்

கும்பகோணம் ஆக 2-  எல்.ஐ.சி.பங்குகளை தனியாருக்கு விற்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர் சங்கம் எல்.ஐசி.அதிகாரிகள் சங்கம் எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் எல்.ஐ.சி.முகவர்கள் சங்கம் எல்.ஐ.சி.ஓய்வு ஊதியர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கும்பகோணம் எல்ஐசி கிளை-1, 2 அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. கிளை இரண்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைவர் ஆர்சுரேஷ் தலைமை வகித்தார். கோட்ட சங்க துணை தலைவர் சுப்பிரமணியன் இணை செயலாளர் சேகர் வளர்ச்சி அதிகாரி நரேந்திரன் முகவர் குழந்தைவேல்(லிகாய்) ராஜேந்திரன் (சியாபி) ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் திருஞானம் கிளை ஒன்றில் நடைபெற்ற போராட்டத்திற்கு எஸ்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். ஊழியர் சங்கம் சார்பாக ராஜேஸ்வரி வளர்ச்சி அதிகாரி சங்கம் சார்பாக செந்தில்குமார் ஓய்வூதியர் சங்கம் சார்பாக ராதாகிருஷ்ணன் பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பாக ஜவகர்லால் உள்ளிட்டோர் போராட்டத்தை விளக்கி பேசினார். ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.