tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டம்

தரங்கம்பாடி, ஜூலை 1- புதிய கல்விக் கொள்கைக்கு எதி ராகவும், இந்தி மொழி திணிப்பை கண் டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாகை மாவட்டம் மணல்மேடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.  வட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட துணைச் செயலாளர் செ.கபிலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.கவியரசன், கல்லூரி நிர்வாகிகள் சந்தோஷ்குமார், க.கலைச்செல்வன், வேல்முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

;