tamilnadu

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்  

திருச்சிராப்பள்ளி, மார்ச் 7-  திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டா வது திங்கட்கிழமை நடைபெற்று வருகிறது.   அதன்படி வரும் 9-ந் தேதி பிற்பகல் 4 மணியளவில் ஸ்ரீரங்கம், முசிறி, லால்குடி ஆகிய கோட்டங்க ளில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு  குறைதீர் கூட்டம் அந்தந்த சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சம்பந் தப்பட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது. அது போல  திருச்சி கோட்டாட்சியர்  தலைமையில் 16-ல் பிற்பகல் 4 மணியளவில் கூட்டம் நடை பெறவுள்ளது. மேலும் விவரங்க ளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தையோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431 – 2412590-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.