tamilnadu

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி முக்கிய செய்திகள்

விஷ வண்டுகளை  அகற்ற கோரிக்கை

சீர்காழி, ஜன.22- நாகை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சேவை மையக் கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தின் பின்புறம் வளர்ந்துள்ள ஒரு பனைமரத்தில் மட்டை யில் ஆயிரக்கணக்கான விஷவண்டுகள் கூடு கட்டி வசித்து வருகின்றன.  காலை மற்றும் மாலைப் பொழுது களில் மரத்திலிருந்து பறந்து கீழே வந்து கொண்டிருப்பதால், சேவை மையக் கட்டிடத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டிடம் அமைந்துள்ள நடுத்தெருச் சாலையில் நடந்து செல்ல அனைவரும் அச்சம டைகின்றனர். வேகமாக காற்றடிக்கும் போதெல்லாம் கூட்டிலிருந்து சப்தத்து டன் பறந்து வெளியேறும் வண்டுகள், குழந்தைகள் மற்றும் பெண்களை தாக்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே வடகால் சேவை மைய கட்டிடம் பின்புறம் கூடுகட்டி வாழ்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் விஷ வண்டுகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

சாலை பாதுகாப்பு வாரம் மருத்துவ முகாம் 

கும்பகோணம், ஜன.22- சாலை பாதுகாப்பு வார விழாவை யொட்டி நாச்சியார்கோவில் காவல் நிலை யம் மற்றும் முருக்கங்குடி ஆரம்ப சுகா தார நிலையம் இணைந்து நாச்சியார் கோவில் பொதுமக்களுக்கு சாலை பாது காப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.  திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன், நாச்சி யார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி, திருவிடைமருதூர் காவல் ஆய்வா ளர் கவிதா, பந்தநல்லூர் காவல் ஆய்வா ளர் சுகுணா, திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் விஜயா, உதவி ஆய்வாளர் தீபநாதன் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், முருக்கங்குடி ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவர் டேனிஸ்ராஜ், வட்டார சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்தி ரன், ஜோதிநாதன் மற்றும் மருத்துவக் குழு வினர் சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளின் கல்வி பரிமாற்ற நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜன.22- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நல்லாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராமப்புற மாணவர்களுக் கான பரிமாற்ற நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.  நல்லாடை அரசு உயர்நிலைப்பள்ளி, காருகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் இணைந்து அப்பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறை யில் கற்பிக்கப்படும் பாடமுறைகள், அறி வியல் ஆய்வு கூடங்களில் எவ்வாறு சோதனை மூலம் கற்பிக்கப்படுகிறது என் பதை பற்றியும் அறிந்து கொண்டனர்.  பின்னர் மாணவர்களிடையே விளை யாட்டு போட்டிகள், தனித் திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் தலை மையாசிரியர் இளவரசன் தலைமை யிலான ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இரு பள்ளிகளின் 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள், செம்பனார் கோவில் வட்டார வள பயிற்றுநர் ஜோதி லெட்சுமி உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

;