tamilnadu

img

தபால் துறை காலியிடங்களை நிரப்பக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி:அகில இந்திய தபால்துறை சேமிப்பு வங்கி கணக்கு கட்டுப்பாட்டு கூட்டமைப்பு சங்கத்தின் 5-ஆவது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்  அருகில் அன்னதான சமாஜத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற மாநாட்டிற்கு முதுநிலை கண்காணிப்பாளர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். அஞ்சல் 3 மாநில செயலாளர் வீரமணி, அஞ்சல் 4 மாநில செயலாளர் கண்ணன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். சங்க முன்னாள் பொதுச்செயலாளர் அப்பன்ராஜ், ராகவேந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மதியம் நடைபெற்ற பொருளாய்வு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆண்டறிக்கையை மாநில செயலாளர் ஜாஸ்மின் ஜலால் பேகம் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை மாநில நிதி செயலாளர் ஜீவன் சமர்ப்பித்தார். இரண்டாம் நாளான சனியன்று நடைபெற்ற மாநாட்டிற்கு மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜாஸ்மின் ஜலால் பேகம் சிறப்புரையாற்றினார்.   மாநாட்டில், தபால் துறையை தனியார் மயமாக்கக் கூடாது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தபால்துறை வங்கி கணக்கு கட்டுப்பாட்டு ஊழியர்கள் தபால்துறையில் டெபாசிட் செய்யும் வங்கி கணக்கு விவரங்களை ஆராய்ந்து பார்ப்பதால் அவர்களை ஆடிட்டராக அறிவிக்க வேண்டும். 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக வரவேற்பு குழு செயலாளர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். 

;