tamilnadu

img

சேதுபாவாசத்திரம் ஒன்றிய 15வது வார்டுக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக் கிழமை காலை தொடங்கி, நள்ளிரவு வரை நீடித்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியா னது. இதுகுறித்து தேர்தல் ஆணை யத்தின் இணையதளத்திலும் வெற்றி பெற்றவர் குறித்து அறிவிப்பு வெளியானது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 3 மணிக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம் மற்றும் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு 15 ஆவது வார்டு உறுப்பினர் பொறுப் ்பிற்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதிகா மற்றும் 25 க்கும் மேற்பட்டோருடன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கை.கோவிந்தராஜனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

மேலும், அவரது அறைக்குள் நுழைந்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தபால் வாக்குகள் எண்ணும் போது, தங்கள் வேட்பாளரை அழைக்காமல் வாக்கை எண்ணி உள்ளனர். இதில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கை.கோவிந்தராஜன் விளக்கம் அளிக்கையில், “ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்த லுக்கு, தேர்தல் அலுவலராக பொறு ப்பு வகித்தது ஊரக வளர்ச்சி உதவி  இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன் தான். இதுகுறித்து நான் எந்த முடிவும்  எடுக்க முடியாது. அவரிடம் முறை யிடுங்கள் அல்லது மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு கொடுங்கள். இன்று வந்து முடிவை மறுப்பது ஏற்க த்தக்கதல்ல. 

வார்டு வாரியாக பெற்ற வாக்கு கள் அஞ்சல் வாக்குகள் என அனை த்தும் தெளிவாக உள்ளது. இதில் ஏதும் குளறுபடிகள் இல்லை. எனவே  அமைதியாக கலைந்து செல்லு ங்கள். உங்களுக்கு திருப்தி இல்லை  என்றால் நீதிமன்றத்தை நாடும் உரிமை உங்களுக்கு உள்ளது” எனக்  கூறினார். இதனை ஏற்க மறுத்து முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் தலை மையில் வாக்குவாதம் ஏற்பட்ட தாகக் கூறப்படுகிறது.  பின்னர் இதுகுறித்து முன்னாள்  எம்எல்ஏ சிங்காரம் செய்தியாளர்க ளிடம் பேசுகையில், எங்கள் வேட்பா ளர் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்துள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கையின் போது எங்கள் வேட்பாளர் அளிக்கப்படவில்லை. எங்களை தோல்வி என்று சொல்வ தை ஏற்றுக் கொள்ள முடியாது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

எங்கள் ஆதரவாளர்கள் அளித்த ஆதரவாளர்கள் அளித்த தபால் வாக்குகள் எங்கள் கணக்கில் பதி வாகவே இல்லை” என்றார். மேலும், “திங்கள் கிழமை அன்று ஆட்சியரை  சந்தித்து மறு வாக்கு எண்ணிக்கை க்கு முறையிடப் போவதாகவும்” தெரி வித்தார்.  இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் கை. கோவி ந்தராஜனிடம் கேட்டதற்கு, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.45  மணிக்கு சேதுபாவாசத்திரம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்கா ரம் தனது ஆதரவாளர்கள் 25 பேருடன்  வட்டார வளர்ச்சி அலுவலர் அறை க்குள் நுழைந்து, ஒன்றியக் குழு  வார்டு 15க்கு மறு வாக்கு எண்ணி க்கை கோரி, கண்ணியக் குறைவான வார்த்தைகளில் பேசினார். நான் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அவர், எதிர்த்தரப்பு வேட்பாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தல்  நடத்தும் அலுவலர்கள் செயல்பட்ட தாக அவதூறாக பேசினார். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.  ஊராட்சி ஒன்றியக் குழு 15ஆவது வார்டில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் அழகுமீனா 1366, ராதிகா 905, சந்திரா 440, சிவ குமாரி 123, சுசீலா 122, நித்தியா 173,  ஜெயலட்சுமி 99, ஜோதி மலர் 116 மொத்தம் 3335 வாக்குகள் ஆகும். அஞ்சல் வாக்குகள் 9 ஆகும். செல்லாத வாக்குகள் 192 ஆக மொத்தம் 3536 ஆகும்.

;