தரங்கம்பாடி ஜூலை 7- நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே தோட்டம் கிராமத்தில் வசிக்கும் செல்வி என்பவரது குடிசை வீடு சனியன்று மாலை அருகில் எரிந்த குப்பையில் இருந்து தீப்பொறி காற்றில் பரவி எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்த ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. சம்பவம் அறிந்து எம்.எல்.ஏ.,பவுன்ராஜ், வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினர். கிராம நிர்வாக அலுவலர் (பொ) உதயக்குமார், கிராம உதவியாளர் உடனிருந்தனர்.