திருச்சிராப்பள்ளி, ஜூலை,25- திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையம் கிராமத்தில் வியாழனன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி, மாவட்ட குழு உறுப்பினர் தளுகை ஆர்.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். சாக்கடைகளை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட த்தில் விவசாய தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அன்று ஊராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக மங்கள்ராஜ் வரவேற்றார். அன்ன காமு நன்றி கூறினார்.