tamilnadu

img

திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி பணி விரைவில் துவக்கம்

அமைச்சர் விஜயபாஸ்கர் 

அறந்தாங்கி, நவ.15- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 1 கோடியே 57 லட்சம் மதிப்புடைய சிடி ஸ்கேன் அதிநவீன இயந்திரத்தை சுகாதார துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டில் ஏழு அறை கள் கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை அறையை தொடங்கி வைத்தார்.  தேசிய தர உத்தரவாத குழு ஆய்வில் மாநில அள வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அரசு மருத்துவமனையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சரி டமிருந்து தேசிய தரச்சான்று உடன் பரிசு தொகையாக 19 லட்சத்து 46 ஆயிரத்து 661 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.   தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் ஆறு இடங்க ளில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்காக நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளன. நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருது நகர், நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில்  முதற் கட்டமாக 100 கோடியை ஒதுக்கி விரைவில் பணிகள் துவங்க உள்ளன. தமிழகத்தில் இதுவரை 95 சிடி ஸ்கேன் மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எம் ஆர் ஐ ஸ்கேன் 18 ம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லை நோய்த் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல் அல்ல. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். இந்த மாத இறுதிக்குள் நல்ல முடிவாக வரும். அதே போல் விரை வில் பணி நியமன ஆணை வர உள்ளது. வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 4500 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப் படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மருத்துவர்கள் சந்திரேகரன், ரவி, சேகர், மனோஜ், ராதா கிருஷ்ணன், ஆசிப் மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பி னர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.