tamilnadu

img

தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்கள் இயக்குக!

தூத்துக்குடி, ஜூன்  27 திருநெல்வேலி- பாலக்காடு- பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்,மதுரையிலிருந்து மும்பை செல்லும் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு தற்சமயம் தூத்துக்குடியில் இருந்து பல ஆண்டுகளாக ஒரே ஒரு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆழ்வார்திருநகரியில் நின்று செல்ல வேண்டும், தஞ்சாவூர் கும்பகோணம் வழி யாக தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என  கோரி ரயில்வே அமைச்சரி டம் கனிமொழி எம்பி கோரிக்கை மனு அளித்தார்.