tamilnadu

img

குதிரை எடுப்பு விழா

அறந்தாங்கி, ஜூலை 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா திங்கள் மாலை நடை பெற்றது. குயவர் தெரு தொழிலாளர்கள் செய்த 40 அடி உயர ஒரு மண் குதிரை, 20 அடி உயர 15 குதிரை மற்றும் பரிவார தெய்வங்களை, செண்டை மேளம் முழங்க 120 இளைஞர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயிலில் வழிபாடு நடந்தது. இரவு கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றன.