tamilnadu

img

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம், ஜூன்10- நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை உலகச் சுற்றுச் சூழல் தின விழா ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமையில்  நடைபெற்றது. தொடர்ந்து மாணவ மாணவியர் பங்கேற்ற உலகச் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார். “காற்று மாசில்லா உலகம் படைப்போம்!” என்று முழக்கமிட்டும், பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் சென்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிறைவு பெற்றது.