tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திருச்சிராப்பள்ளி, டிச.17-  திருச்சி மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக கண்ணகி வேட்புமனு தாக்கல் செய்தார்.  சிபிஎம் மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.வி.எஸ்.இந்துராஜ், சுப்ரமணியன், பனமங்கலம் கிளை செயலாளர் சுப்பிர மணியன், சக்திவேல், ராஜேந்திரன், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், பிச்சாண்டர் கோவில் கிளை செயலாளர் கணேசன், மருதம்பாள், சின்னசாமி, திமுக செய லாளர் மகேஷ், பால்ராஜ், பன்னீர்செல்வம், சரவணன், ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். துறையூர் ஊராட்சி ஒன்றி யம் கண்ணனூர் பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சியின் கோமதி குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், காசிராஜன், சந்திரசேகரன், குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.  அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சிபிஎம் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத்மணி வேட்பு மனு தாக்கல் செய் தார். மத்திய கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், அபிஷேகபுரம் பகுதிக்குழு செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.