தரங்கம்பாடி ஜூன் 23- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அங்காடிகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை இணைக்கும் முகாம் நடைபெறுகிறது. சனியன்று மீனவ கிராமங்களான தரங்கம்பாடி, குட்டியாண்டூர் ரேசன் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கிளை மேலாளர்கள் எட்வர்ட், சிலம்பரசன் கலந்து கொண்டனர். முகாமில் 2500 குடும்ப அட்டைதாரர் பயனடைவர்.