tamilnadu

img

6 கிமீ தூரம் தொடர்ந்து தலைகீழாக பல்டி அடித்து 4-ம் வகுப்பு மாணவர் சாதனை

சீர்காழி, மே 9-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜெயசீலன்(40). இவரின் மகன் ஜெயநிதி(9), புதுப்பட்டினம் ரமேஷ் மெட்ரிக் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கராத்தே போட்டியில் கிரீன்பெல்ட் வென்றுள்ளார். இவர் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலில் தலை கீழாக பல்டி அடிப்பதை துவக்கினார். பின்னர் தற்போது தொடர்ந்து 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பல்டி அடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மார்ச் 28-ஆம் தேதி மயிலாடுதுறையில் ஏ.வி.சிகல்லூரி தமிழ்ப் பேராசிரியர் தமிழ்வேல் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் மாணவர் ஜெயநிதி, மயிலாடுதுறை முருகன் மலைக்கோயிலில் இருந்து பல்டிஅடித்துக் கொண்டே 6 கிலோ மீட்டர் தூரத்தில் எலந்தங்குடிவரை ஒரு மணி நேரத்தில் சென்று சாதனை படைத்தார். இதனை தேசிய சாதனை முயற்சி என்று அனைவரும் பாராட்டினர். பல்டி அடிப்பதில் சாதனை படைத்து வரும் மாணவர் ஜெயநிதி படிப்பிலும் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று வருகிறார்.சாதனை மாணவரை பாராட்டு நடைபெற்ற விழாவில் புதுப்பட்டினம் ரமேஷ் மெட்ரிக் பள்ளி தாளாளர்திருவேங்கடம் கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பழையாறு மீனவப் பிரதிநிதிகள், பள்ளிமுதல்வர், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;