tamilnadu

ஆளுங்கட்சி கூட்டத்திற்கு சென்ற சரக்கு வாகனம் விபத்து: 4 பேர் பலி

தரங்கம்பாடி, ஏப்.12-நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றியம் கந்தமங்கலம் கிராமத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில்வியாழன் இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில் கட்சி தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பின் கூட்டம் முடிந்து, சரக்கு வாகனத்தில் 30 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அனந்தநல்லூர் என்ற பகுதியில் சென்ற போது டயர் வெடித்ததில் வாகனம் நிலை தடுமாறி அருகில்இருந்த வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கந்தமங்கலத்தை சேர்ந்தவிநாயகராஜா, அருள்தாஸ், தனபால் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், மதியழகன், பிச்சை, ஓட்டுநர் மாரிமுத்துஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மதியழகன் வெள்ளியன்று காலை உயிரிழந்தார். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து பாலையூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.மேலும் சட்டவிரோதமான முறையில் சரக்கு வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கு காரணம் என்றும், தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வரும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை தகுதிஇழப்பு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள்30 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் மோகன் குமார் தலைமையில் மயிலாடுதுறை கோட்ட அலுவலர் கண்மணியிடம் வெள்ளியன்று புகார் மனு அளித்தனர்.

;