tamilnadu

img

பூக்களின் விலை கடும் உயர்வு

 

திண்டுக்கல், ஜன.12- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டும் வரத்துக் குறைவாலும் திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உய ர்ந்துள்ளது. ஒருகிலோ மல்லி கைப்பூ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி றது.  வெள்ளோடு, நரசிங்க புரம், சின்னாளப்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் விளை விக்கப்படும் பூக்கள் திண் டுக்கல் மலர் சந்தைக்கு அதி களவில் கொண்டுவரப்படு கின்றன. தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவால் பூக் களின் விளைச்சல் குறைந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்தவாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னையான மல்லி ஒருகிலோ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ரூ.600-க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 400 ரூபா ய்க்கும் விற்பனையாகிறது. 300 ரூபாய்க்கு விற்பனை யான ஜாதிப்பூ ஆயிரம் ரூபாய்க்கும், ரூ.500-க்கு விற்பனையான காக்கரட் டான் பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி றது. பன்னீர் ரோஸ், செவ் வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

;