tamilnadu

img

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மர்ம மரணம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

தருமபுரி, ஜூலை 20- சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்-விஜிய குமாரி தம்பதியினர். இவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வர்கள். இவர்களுக்கு திவ்யா (19) என்ற மகளும் மூன்று மகன்கள் உள்ளனர். பெங்களூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். திவ்யா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள் ளார். இந்நிலையில் வேலூர் மாவட் டம், திருப்பத்தூர் வட்டம், சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-மஞ்சுளா தம்பதியி ரின் மகன் சக்தி (எ)சக்தி வாணன் (20), இவர் திவ்யா பணிபுரிந்த இடத்திலேயே பணியாற்றியுள்ளார். திவ்யாவும் சக்தியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூ கத்தினர் என்பதால் கடந்த ஓர் ஆண்டுக்கு முன் இருவரின் வீட் டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சக்தி அவர் வீட்டிற்கு திவ்யாவை அழைத்தி சென்றுள் ளர். சில தினங்களிலேயே கிரா மத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தாரர் கள் திவ்யாவின் பெற்றோரை சின்னமூக்கனூருக்கு வரவ ழைத்து, திவ்யாவின் பெற்றோ ரிடம் நாங்கள் வேறுசமூகம், நீங்கள் ஆதிதிராவிடர் அதனால் நாங்கள் ஊரில் சேர்க்கமாட் டோம். எனவே நீங்கள் உங்கள் பெண்ணை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்று  கூறியுள்ளனர். மேலும் ஆதி திராவிட பெண் ஊருக்கு வந்த தற்காக அபராத தொகையாக ரூ.40 ஆயிரம் ஊருக்கு கட்டி விட்டு திவ்யாவை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள் ளனர். பின்னர் பஞ்சாயத்துதார ரிடம் திவ்யாவின் பெற்றோர் ரூ.30 ஆயிரத்தை கொடுத்துவிட்டு திவ்யாவை மீட்டனர். இதனையடுத்து அவர்கள் கூலிவேலைசெய்யும் பெங்களூர் பகுதிக்கே திவ்யாவை அழைத்து சென்றனர். பெங்களூரில் இருந்த திவ்யா காணாமல் போகவே திவ்யாவின் பெற்றோர் பெங்க ளூரில் உள்ள புட்டன அள்ளி காவல்நிலையத்தில் புகார் செய்த னர். புகாரின் மீது நடைபெற்ற விசாரணையில் திவ்யாவை,  சக்தி மீண்டும் அழைத்து சென் றது தெரியவந்தது. இதனையடுத்து திவ்யா வின் பெற்றோர் சின்னமூக்க னூர் கிராமத்துக்கு சென்று திவ் யாவையும் சக்திவாணணையும் சந்தித்துள்ளனர். அப்போது எங் களை விட்டு விடுங்கள் என கூறவே, திவ்யாவின் பெற்றோர் திவ்யாவுக்கு 2 பவுன் அளவுக்கு நகை எடுத்து கொடுத்துள்ளனர். அதன் பின் திவ்யா அவர்களது பெற்றோரிடம் அவ்வப்போது  நலன் விசாரித்து வந்தார். இத னிடையே கடந்த 15 நாட்களாக திவ்யாவிடமிருத்து எந்த தக வலும் வரவில்லை. பின்னர் ஜூலை 14 ஆம் தேதி யன்று சின்னமூக்கனூரில் இருந்து, திவ்யா விஷம் குடித்து விட்டதாக திவ்யாவின் பெற் றோருக்கு தகவல் தெரிவித்துள்ள னர். அதன்பின் மேல்சிகிச்சைக் காக தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை அழைத்து சென்றதாகவும் அங்கு திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்ததாக திவ்யாவின் பெற் றோருக்கு ஜூலை 17 ஆம் தேதி யன்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்திலிருந்து போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து திவ்யாவின் தந்தை முருகானந்தம் கூறுகை யில், எங்கள் மகளை சாதிப் பெயரை சொல்லி துன்புறுத்தி யுள்ளனர். என் மகள் தற்கொலை செய்யவில்லை. என் மகள் உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள் ளது. சக்திவாணனும் அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். என்  மகள் தருமபுரி அரசு மருத்துவ மனை வருவதற்கு முன்னே இருந் துள்ளார். இறந்த என் மகளை பிணவறையில் கொண்டு சென்ற பின்னர் சக்திவாணனும் அவ ரது தாயார் மஞ்சுளாவும் ஓடிவிட் டனர். எனவே என் மகள் இறப்பு குறித்த வழக்கை கொலை வழக் காக பதிவுசெய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் திவ்யாவின் இறப்பை கொலை வழக்காக மாற்ற வேண்டும். எஸ்சி/எஸ்டி, வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திவ்யாவின் உடலை வாங்க மறுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சனியன்று எஸ்சி/எஸ்டிபிரிவு வன் கொடுமை கட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த னர். பின்னர்  திவ்யாவின் பெற் றோர் திவ்யாவின் உடலை பெற்று தங்களது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

;