tamilnadu

img

மருத்துவர்கள் போராட்டம்: தலைவர்கள் ஆதரவு

சென்னை,அக். 29- 4அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில்  ஈடு பட்டு வருகின்றனர். இதனிடையே உண்ணாநிலை போராட் டத்தில் ஈடுபட்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட 11  மருத்துவர்களில், 2 பேரின் உடல்நிலை மோச மாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், 5வது  நாளான செவ்வாயன்று(அக்.29) உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். முன்னதாக போராட்டத்திற்காக அமைக்  கப்பட்டிருந்த பந்தலையும், நாற்காலிகளை யும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அகற்றி யது. ஆனாலும் போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள், மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரு கின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்நோயா ளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரு வோருக்கு மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை  அளித்து வருகின்றனர்.மேலும் போராட் டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்து வமனை வளாகத்திலும் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். சேலம், தஞ்சை, காஞ்சி புரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களிலும் போராட்  டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் அனைத்து பணி களையும் புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, போராட்டம் நடத்தி வரும்  அரசு மருத்துவர்களை அழைத்து பேசி சுமூக  தீர்வு காண முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட  வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ,திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

;