tamilnadu

img

இண்டேன் எல்பிஜி டிஜிட்டல் பேமெண்ட் அறிமுகம்

சென்னை, ஜன. 30- இண்டேன் எல்பிஜி வாடிக்கையா ளர்கள் நலன்கருதி டிஜிட்டல் பணபரி வர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறி வித்துள்ளது.  இண்டேன் விநியோகஸ்தர்கள், இண்டேன் எல்பிஜி  வீட்டு உபயோக சிலிண்  டர்களை வாடிக்கையாளர்களின் வீடு களுக்கு வந்து வழங்குகின்றனர். சிலிண்டர்  ஒப்படைத்த உடன் வாடிக்கையாளர் கையொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்  பட்டுள்ளது. இந்த விலை டெலிவரி செய் யப்படும் சிலிண்டர்களுக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியதாகும். இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை வாடிக்கையாளர்கள் டிஜிட்டல்  பேமெண்ட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்  யப்பட்டுள்ளது. இதன்படி, வாடிக்கை யாளர்கள் ஐவிஆர்எஸ் மூலம் சிலிண்டர்  பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கை யாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு மெசேஜ் மூலமாக ஆன் லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க்  (http://payit.cc/L1xxxxxx) அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்க் ஒரு நாள்  மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன்  முகவரியை கிளிக் செய்து வாடிக்கை யாளர்கள், கேஷ் மெமோவில் குறிப் பிட்டுள்ள தொகையை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ -  வாலெட் உள்ளிட்டவற்றின் மூலம் ஆன் லைன் பேமெண்ட் செய்யலாம். இந்த வழிமுறையில் சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

முதலில் குறிப்பிடப்பட்ட வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாவிட்டால் டெலிவரி பணியாளரை, தங்களிடம் சிலிண்டர் ஒப்படைக்கும் போது டிஜிட்டல்  பேமெண்ட் பெறும்படி வலியுறுத்தலாம். அவர்களை பேமெண்ட் பெறும் கரு வியை கொண்டு வருமாறு கூறலாம்.  அந்த கருவியை கொண்டு நெட்பேங்கிங்,  கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ- வாலெட்,  பிஎச்ஐஎம், யூபிஐ, கூகுள் பேமெண்ட், பேடிஎம் ஆகியவை மூலமாக பில் தொகையை செலுத்தலாம். பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக்  கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி செய் யப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் அனுப்பி வைக்கப்பட்டது குறித்து மெசேஜ் அனுப்பப்படும்.  சிலிண்டர் எடை பற்றி சோதித்து காண் பிக்கப்பட்டது, சிலிண்டர் கசிவு உள்ளதா என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது, கேஷ்  மெமோவில் உள்ளபடி சிலிண்டர் கட்ட ணம் வாங்கப்பட்டது, உள்பட ஒட்டு மொத்த மான வாடிக்கையாளர்களின் அனுபவம் பற்றி ரேட்டிங் செய்து சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை-044 24339235, 24339236, மதுரை-0452 2533956  திருச்சி- 0431 2740066, 2740880, கோவை-  0422 2247396, 2240696 ஆகிய எண்களில்  காலை 9.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை தொடர்பு கொள்ளலாம். எல்பிஜி அவ சர சேவை குறித்து 1906 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அணுகலாம். இண்டேன் குறித்த புகார்களுக்கு 1800-2333-555 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம்.

;