tamilnadu

வங்கிகளில் நடத்திய சோதனை அறிக்கைகளை வெளியிட உத்தரவு

துதில்லி,ஏப்.26-ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் குறித்து நடத்தப்படும் சோதனை அறிக்கைகளை ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருடாந்தர வங்கி சோதனை அறிக்கைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடுமாறு ஆர்டிஐ செயற்பாட்டாளர் எஸ்.சி.அகர்வால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந் தார். இந்த வழக்கின் விசாரணை வெள்ளியன்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.சட்டப்படி தகவல்களை வெளியிட வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் தகவல்கள் குறித்த கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ளும்படி ரிசர்வ் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க ரிசர்வ் வங்கிக்கு கடைசி வாய்ப்பளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டப்படி விலக்களிக்கப்பட்ட தகவல்களை தவிரஇதர விவரங்களை வெளியிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதற்கு மேல் தகவல் அறியும் உரிமைச் சட்டவிதிகளை ரிசர்வ் வங்கி மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களை கோருவோருக்கு ரிசர்வ் வங்கி தகவல்களை வழங்க மறுக்க முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும், மத்திய தகவல் ஆணையமும் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

;