தமிழகம் முழுவதும் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து வர வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.