tamilnadu

img

தமிழகத்திlற்கு இந்தி கட்டாயம் இல்லை என்ற திருத்தப்பட்ட வரைவு அழகிய தீர்வு- ஏ.ஆர்.ரஹ்மான் 

தமிழகத்திlற்கு இந்தி கட்டாயம் இல்லை என்ற திருத்தப்பட்ட வரைவு அழகிய தீர்வு- ஏ.ஆர்.ரஹ்மான் 
தமிழகத்திற்கு இந்தி கட்டாயம் இல்லை என்று புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது அழகிய தீர்வு என்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை   மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் கடந்த 31-ந் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்விக் கொள்கை  வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜூன் 30-ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மும்மொழிக்கொள்கை பரிந்துரை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து #stophindiImposition, #TNAgainstHindiImposition போன்ற ஹேஷ்டேக்குகள் தேசியஅளவிலும் உலக அளவிலும் டிரண்ட் ஆனது. 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத்தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பது காட்டாயம் அல்ல என மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான திருத்தப்பட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட வரைவு அழகிய தீர்வு என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

;