tamilnadu

img

இரு சக்கர வாகனப் பயிற்சி 

 தஞ்சாவூர் ஆக.24- அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி தஞ்சாவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது.  இதில் தஞ்சாவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆண், பெண் சேரலாம். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் சேரலாம். வயது உச்சவரம்பு கிடையாது. பயிற்சிக் காலம் 3 மாதம். பிற்பகல் 3 முதல் 6 மணி வரை தஞ்சாவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், முதல்வரை நேரில் அணுகி விவரம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.