tamilnadu

தஞ்சாவூர், அரியலூர் முக்கிய செய்திகள்

மகப்பேறு உதவித் திட்டம் தாமதமின்றி வழங்க அறிவுறுத்தல் 
தஞ்சாவூர், ஜன.21- பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஏ.காந்தி செவ்வாய்க் கிழமை திடீர் ஆய்வு மேற் கொண்டார். வருகைப் பதி வேடு, போதிய மருந்துகள் இருப்பு, ஆய்வகம் உள்ளிட் டவை ஆய்வு செய்தார்.  மேலும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்ட றிந்த இணை இயக்குநர், நோ யாளிகளை காத்திருக்க வைத்திடாமல், உடனடியாக தகுந்த சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு தாமதமின்றி மகப்பேறு உதவித் திட்டம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு, அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார். நிர்வாக அலுவலர் செல்வ கணபதி, தலைமை மருத்துவ அலுவலர் பாஸ் கர், டாக்டர் காமேஸ்வரி, அலுவலக கண்காணிப்பா ளர் செந்தில் குமார், உதவி யாளர் பிரகாஷ், சுபிக் ஷா உடன் இருந்தனர்.

மணல் கொள்ளையை  தடுக்க சிபிஎம் வலியுறுத்தல் 
அரியலூர், ஜன.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றி யக்குழு கூட்டம் தனலெட் சுமி தலைமையில் நடை பெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு இளங்கோவன், மாவட்டக்குழு சிற்றம்பலம், ஒன்றிய செயலாளர் துரை.அருணன், ஒன்றியக்குழு சந் தானம், கிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜனவரி 22 முதல் கட்சி வளர்ச்சி நிதி வசூல் பணி செய்வது, 28-ல் சிவப்பு புத்தக தினத்தின் கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பை துவக்குவது. தீக்க திர், மார்க்சிஸ்ட் சந்தாவை உயர்த்துவது, மணல் கொள் ளைக்கு எதிரான இயக்கத் தை வலுவாக முன்னெடுப் பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

டெல்டாவில்  25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு
தஞ்சாவூர், ஜன.21-  தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில், நடப் பாண்டு சம்பா நெல் கொள் முதல் தொடர்பாக, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில், விவசாயிகள் மற்றும் அலு வலர்களுடனான ஒருங்கி ணைந்த முத்தரப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் உண வுத்துறை அமைச்சர் காம ராஜ், செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்டா மாவட் டங்களில் நடப்பு சம்பா பருவ நெல் கொள்முதல் செய்ய இதுவரை 455 நேரடி நெல் கொள்முதல் நிலைய மும், டெல்டா அல்லாத மாவட் டங்களில் 63 நெல் கொள்முதல் நிலையமும் திறக்கப்பட்டு 87 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், 25 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசுடன் பேசி யுள்ளோம். முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழி யர்கள் மீது விவசாயிகள் புகார் அளித்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும். தற்போது ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய் யப்பட்டு வரும் நிலையில் 1000 மூட்டைகளாக கொள் முதல் செய்யப்படும் என்றார்.

;