தஞ்சாவூர், நவ.2- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் உருவப் படத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும், தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவ னர் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் சிலைக்கும், துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணி யன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ) முனைவர் கு. சின்னப்பன், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.